சேலம்: ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் புதிய பேருந்து நிலையம் அருகே நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். இதனை நம்பி 50-க்கும் மேற்பட்டோர் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். ஆனால் பலருக்கு பாலசுப்பிரமணியம் பணத்தை திருப்பி தரவில்லை.
இதனால் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த காவேரியப்பன் என்பவர் சேலம் மாநகர காவல் ஆணையரில் புகார் அளித்தார். அந்த புகாரில், ரூ.37 லட்சம் டெபாசிட் செய்து ஏமாந்துவிட்டேன். இந்த பணத்தை திரும்ப பெற்று தருமாறு குறிப்பிட்டிருந்தார். இதனிடையே பாலசுப்பிரமணியம் அவரது மனைவி தனலட்சுமி தலைமறைவாகினர்.
இதனால் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இருவரும் சேலம் அழைத்து வரப்பட்டனர். இதைத்தொடர்ந்து நேற்றிரவு பாலசுப்பிரமணியம் சேலம் மத்திய சிறையிலும், அவரது மனைவி தனலட்சுமி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: செல்பி எடுக்க முயன்ற பொறியாளர் பலி