ETV Bharat / state

புரட்டாசி எப்படா முடியும்னு இருப்பாங்களோ.. ஆட்டுச்சந்தையில் ரூ. 4 கோடிக்கு வர்த்தகம் - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே உள்ள கொங்கணாபுரம் சந்தையில் ரூ.4 கோடி ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளது.

விற்பனைக்காக காத்திருந்த ஆடுகள்
சேலம் அருகே உள்ள கொங்கணாபுரம் சந்தையில்
author img

By

Published : Oct 17, 2021, 2:31 PM IST

சேலம்: எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். இன்று கூடிய சந்தைக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

புரட்டாசி மாதம் நிறைவு

கடந்த சில வாரங்களாக சந்தைக்கு வாரந்தோறும் சுமார் 2500 மாடுகள் விற்பனைக்காக வந்திருந்தன. இந்நிலையில், நாளை புரட்டாசி மாத முடிவதால் இன்று ஒரே நாளில் அதிகமாக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவை தவிர 3000 க்கும் அதிகமான சண்டை சேவல்கள், கோழிகள் விற்பனைக்கு வந்தன. ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 10 ஆயிரத்து 500 வரை நிர்ணயிக்கப்பட்டது.

வெளி மாநிலத்திற்கு ஏற்றுமதி

சண்டை சேவல்கள் 1000 முதல் 5000 வரை விலை போகின. சண்டை சேவல்களை மோத வீட்டு, அதற்கேற்ப விலை பேசப்பட்டது. அதிக அளவில் பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் இருந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனர். கோழிகள் 100 முதல் 1000 வரை விற்பனை செய்யப்பட்டது.

புரட்டாசி மாத சனிக்கிழமை நேற்றுடன் முடிவடைந்தது. இன்று, இறைச்சி பிரியர்கள் அதிக அளவில் ஆடு மற்றும் கோழி இறைச்சி வாங்குவார்கள் என்பதால், இறைச்சி கடைகள் நடத்துவோர் கொங்கணாபுரம் சந்தையில் கூடுதலாக வணிகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பூனை என நினைத்து புலியைப் பிடித்த பிரபலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.