ETV Bharat / state

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர் கைது - hindu munnani member arrested

காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது
போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது
author img

By

Published : Jun 27, 2021, 7:28 PM IST

சேலம்: கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் (ஜுன் 25) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த தமிழரசன் என்பவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன், அவரது நண்பர் தமிழரசனுக்கு ஆதரவாகப் பேசியதோடு, காவல்துறையினரையும் மிரட்டியுள்ளார். அவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, செல்லபாண்டியன் மற்றும் அவருடைய நண்பர் தமிழரசன் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், அவினாசியில் தலைமறைவாக இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஜம்முவில் இரு இடங்களில் குண்டு வெடிப்பு: என்.ஐ.ஏ. ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.