ETV Bharat / state

சேலம் அருகே குடிநீர் இன்றி அவதிப்படும் மலைவாழ் மக்கள்! - மேல்நிலை நீர் தேக்க தொட்டி

சேலம் அருகே பெருமாள்பாளையம் ஊராட்சி பகுதியில் நீர் தேக்க தொட்டியை கட்டி முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் குடிநீர் வராததால் மலைவாழ் மக்கள் தினம்தோறும் அவதிப்பட்டு வருகின்றன.

சேலம் அருகே குடிநீர் இன்றி அவதிப்படும் மலைவாழ் மக்கள்!

author img

By

Published : Dec 28, 2022, 10:47 PM IST

சேலம் அருகே குடிநீர் இன்றி அவதிப்படும் மலைவாழ் மக்கள்!

சேலம்: அயோத்தியாபட்டினம் அடுத்த பெருமாள்பாளையம் ஊராட்சி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்தினரும் மற்றும் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள் ஆவார்.

இந்த நிலையில் இவர்களின் குடிநீர் தேவைக்காக வனத்துறை சார்பில் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.12 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. தற்பொழுது இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மேலும் நீர்தேக்க தொட்டியிலிருந்து சிறிய அளவிலான குடிநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது அந்த பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பல்வேறு காடுகளுக்கும் மற்றும் பஞ்சாயத்து பகுதிக்கும் சென்று தான் நாள்தோறும் தங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர். மேலும் அவர்களுக்காக அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடி பம்பு பய்ப்புகளும் செயல்படாமல் சேதம் அடைந்து ஆங்காங்கே உள்ளது.

எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மலைவாழ் மக்களுக்காகத் திறந்து அவர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:TRB: 15,149 பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.