தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
இந்நிலையில் சேலம் திருவகவுண்டனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் மணமக்கள் உட்பட பலரும் கரோனா விதிகளை பின்பற்றாமல் கலந்துகொண்டனர்.
இதனையறிந்த சூரமங்கலம் பகுதி மாநகராட்சி அலுவலர்கள் மண்டபத்திற்கு சென்று திருமண வீட்டாருக்கு ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் மரவனேரி பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் ஒருவர்கூட முகக்கவசம் அணியாமல், அதிக அளவில் கூட்டத்தை கூட்டி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு சென்ற அஸ்தம்பட்டி பகுதி மாநகராட்சி அலுவலர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.