சேலம் மாவட்டத்தில் உள்ள அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முதல் முறையாக பிரிட்ஜ், ஏர் கண்டிஷனர் ஆகியவற்றை பராமரிப்பது மற்றும் பழுது பார்க்கும் வகையில் இரண்டு வருட இலவச தொழிற்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற அனைத்து மாணவிகளும், மாதம் 500 ரூபாய் உதவித் தொகையுடன் இப்பயிற்சியைப் பெறலாம். மேலும் பயிற்சியை முடிக்கும் அனைவருக்கும் கேம்பஸ் நேர்முகத்தேர்வு மூலம் வேலையும், தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் சுய தொழில் வாய்ப்புகளும் உருவாக்கித் தரப்படும்.
மேலும், இப்பயிற்சிபெறும் மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ், சீருடை, மடிக்கணினி, புத்தகங்கள், மிதிவண்டி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. எனவே மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பயனடையும்படி பயிற்சி நிலைய முதல்வர் லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கு நேரடி சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் சேலம் கோரிமேடு அய்யந்திருமளிகை ரோட்டில் உள்ள அரசு மகளிர் ஐடிஐயில் நேரிலோ அல்லது 99409-66090 மற்றும் 96551-47502 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.