சேலம் மாவட்டம் வெள்ளையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், ராமநாதபுரம் மாவட்டம் பொதுப்பணித்துறையில் குழாய் பழுது நீக்கும் பிரிவில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது நண்பர்களுடன் ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு (மே 4) வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது, மதுபோதையிலிருந்த ஆறுமுகம் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆறுமுகம் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.