சேலம்: சேலம் மாவட்டத்தில் மேச்சேரி பகுதியில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (செப்டம்பர் 10ஆம் தேதி) வருகை தந்தார். பல்வேறு பகுதிகளில் கட்சியின் கொடியேற்று விழாவில் கலந்துக் கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ‘சனாதனம் பற்றி பேசினால் அதைப்பற்றி தெரிந்து பேச வேண்டும். சாதாரண அடிப்படையில் பேசினார், கொள்கை அடிப்படையில் பேசினார் என்று எடுத்துக் கொள்ள முடியாது எனவும், தேர்தல் உள்நோக்கம் அடிப்படையிலே சனாதனம் குறித்து பேசி வருகிறார்கள்.
பொறுப்புள்ள ஒருவர் பொறுப்பற்ற முறையில் பேசினால் அது ஏற்புடையதல்ல. அவர் வகிக்கும் அந்த பதவிக்கு அழகல்ல எனவும், வாக்களித்த மக்கள் வரும் தேர்தலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். தக்க பதிலடி கொடுப்பார்கள்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் நாட்டினுடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் அடித்தளம் என்று அர்த்தம். அதற்கு காரணம் தற்பொழுது இந்தியாவிலேயே 70% தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது.
தேர்தல் ஒவ்வொரு மாநிலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தேர்தல் நடந்து கொண்டிருந்தால், ஆட்சியாளர்களுக்கு தேர்தல் பற்றி கவலை வரும் மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. இந்த தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்யலாம், எவ்வாறு வெல்லலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்கும். மக்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்குறுதி மற்றும் திட்டங்களை நிறைவேற்ற முடியாது.
நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் பொருளாதார ரீதியாக உயர வேண்டும் எனவும், சேமிப்பு வேண்டும் என்றால் தேர்தல் அடிக்கடி வரக்கூடாது என்றார். கருப்பு பணம் இருக்காது. செலவினம் குறையும். உட்கட்டமைப்பு பணிகளை எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தில் ஆட்சியாளர்களும் சிறப்பாக தடை இன்றி நடத்திட ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும்.
இதன் மூலம் பத்தாயிரம் கோடி ரூபாயை சேமிக்க முடியும். ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் என்பது அவசரமாகவே இருக்கிறது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் எனவும், வறுமையை ஒழிக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், அதற்கான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதைப்பற்றி தான் கவலைப்பட வேண்டுமே தவிர சனாதனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்” என்றார்.
இதையும் படிங்க:‘பாரத்’ பெயருக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா கண்டனம்