சேலத்தில் 10 லட்ச ரூபாய்க்கு பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் குறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராம்ராஜ் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண் குழந்தையின் உறவினர்கள் மற்றும் அந்த குழந்தையை பணம் கொடுத்து பெற்றதாக கூறப்படும் நபர்களிடம் இன்று (ஏப்ரல் 23) விசாரணை நடைபெற்றதாக தெரிவித்தார்.
குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் பாதுகாப்பு நல குழுமம், இளைஞர் நல குழுக்கள் , குழந்தை உரிமைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட வேண்டும் எனறும் அவர் தெரிவித்தார்.
அதற்கான கட்டமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்கும் பரிந்துரை செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கான, சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அதனை நடைமுறை படுத்த வேண்டும் ’’ என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள்க'- ராமதாஸ்