சேலம் பிள்ளையார் நகர் பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த பசுமாடு சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து வெளியில் வர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பசுமாட்டை மீட்க முயற்சித்தும் அது தோல்வியில் முடிந்தது. எனவே இதுதொடர்பாக, செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை அலுவலர் கலைசெல்வன் தலைமையிலான நான்கு தீயணைப்பு வீரர்கள், எட்டு அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் சிக்கியிருந்த பசுமாட்டை கயிறு கட்சி பத்திரமாக மீட்டனர்.
இதனையடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டையும், வரவேற்பையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளனவா? ஓர் கள ஆய்வு