சேலம் மாநகர், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜேம்ஸ். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, தன்னுடைய 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அவரது மனைவி அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரின் அடிப்படையில் ஜேம்ஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணையானது, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், வழக்கை விசாரித்த சேலம் போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், ஜேம்ஸ் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு பத்தாண்டு சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிபதி அளித்த தீர்ப்பைக் கேட்ட ஜேம்ஸ் கதறி அழுது, நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க:இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய எஸ்ஐ: பணியிடை நீக்கம் செய்து ஐஜி நடவடிக்கை!