சேலம்: ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியா 2 பதக்கங்களை வென்றது. இதில், டி-42 பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி வென்றார், தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன்.
அமெரிக்க வீரர் கீரிவ் சாமுடன் கடும் போட்டி நிலவிய நிலையில் வெள்ளி வென்றார், மாரியப்பன். தொடர்ந்து, 1.83 மீட்டர் உயரம் தாண்டி பிகாரைச் சேர்ந்த சரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.
மாரியப்பன் குடும்பத்தினர் கொண்டாட்டம்
இதனை அடுத்து மாரியப்பனின் சொந்த கிராமமான பெரியவடகம்பட்டியில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதுகுறித்து மாரியப்பனின் தாய் சரோஜா கூறுகையில், 'எனது மகன் வெள்ளி ஜெயிச்சது சந்தோஷமாக இருக்கு. அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்வார்’ என நெகிழ்ச்சி படக் கூறினார்.
இதையும் படிங்க: பாராலிம்பிக்கில் வெள்ளி வென்று கெத்துகாட்டிய தமிழன் மாரியப்பன்!