ETV Bharat / state

சேலத்தில் 1 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் - expired food seized at salem by food safety offices

சேலம்: காலாவதியான உணவுகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்த கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிரடி
உணவு பாதுகாப்பு துறை அதிரடி
author img

By

Published : Jan 21, 2020, 9:08 AM IST

சேலத்தில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், காலாவதியான உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, சேலத்தில் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, மளிகைக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், பைகளும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள், காலாவதியான உணவு பொருட்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை அதிரடி சோதனை

இதுகுறித்து பேசிய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இதையும் படிங்க: மகளுக்கு மது ஊற்றி கொடுமை படுத்திய தாய்!

Intro:

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்

சேலம் உணவு துறை அதிகாரி அதிரடி நடவடிக்கை .Body:
சேலத்தில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதனையடுத்து இன்று சேலம் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் அதிரடி சோதனை நடத்தினார்.

அப்போது மளிகைக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பைகளும் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது .

அதேபோல காலாவதியான பாக்கெட் உணவு பொருட்களும் விற்பனை செய்யப்படுவது சோதனையில் தெரியவந்தது.

இதனை அடுத்துடுத்து அவற்றை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டார் .

மீறினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion: இதேபோல சேலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.