சேலம்: மேட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டூரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்திற்கும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஞாயிறன்று பேருந்தில் ஏறுவதற்கு மூதாட்டி ஒருவர் உள்ளூர் பேருந்து நிலையத்துக்குச் சென்றார்.
அப்போது பேருந்து நிலையத்துக்குள் உள்ளே நுழைந்த பேருந்து வேகமாக சென்றபோது, ஓட்டுநர் கவனக்குறைவால் மூதாட்டியின் மீது பேருந்து மோதி, அவர் உடல் மீது ஏறி நின்றது. இதில் அந்த இடத்திலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்தும், விபத்தில் பலியான மூதாட்டி யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் மேட்டூர் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். மூதாட்டியின் உடல் மேட்டூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!