சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள புகளூர் முதல் ரெக்கார் வரை செல்லும் 800 கே.வி. உயர்மின் திட்டத்தால் பாதிக்கப்பட்ட சங்ககிரி, எடப்பாடி தாலுக்கா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சங்ககிரி கோட்டாட்சியரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது, நிலம், பயிர் உள்ளிட்டவைகளுக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்கவேண்டும், முழுமையான இழப்பீட்டை வழங்கிய பிறகே பணிகளை தொடங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து மனு அளித்தனர்.
மேலும், பவர்கிரிட் அலுவலர்கள் விவசாய நிலங்களில் அத்துமீறி செயல்படுவதை தடுக்கக் கோரியும், விவசாயிகளுக்கான இழப்பீட்டை முன்னதாக தெரிவிக்கக் கோரியும் அலுவலர்களிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். இதனைக் கேட்டறிந்த கோட்டாட்சியர் வரும் 13ஆம் தேதி விவசாயிகள் பவர்கிரிட் அலுவலர்கள் அரசு, அலுவலர்கள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணுவதாக உறுதியளித்தார்.
நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள், சங்ககிரி தாலூக்கா செயலாளர் ராஜேந்திரன், செங்கோட்டையன், பவர் கிரிட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:
முறைகேடாக வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழ் - மாவட்ட ஆட்சியரிடம் மனு