ETV Bharat / state

மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உடல் சொந்த ஊரில் அடக்கம்

author img

By

Published : Feb 8, 2020, 5:08 PM IST

சேலம்: அரசு மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Doctor Lakshmi Narasimhan
Doctor Lakshmi Narasimhan

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன். இவர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார்.

அதுமட்டுமின்றி, மருத்துவர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த கொள்கைகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். மேலும், தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கி மருத்துவர்களுக்காகப் போராடியவர்.

Doctor Lakshmi Narasimhan
Doctor Lakshmi Narasimhan

இந்நிலையில், நேற்று (பிப். 07) மாரடைப்பு காரணமாக சேலம் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி நரசிம்மன், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அதன்பின், உடற்கூறாய்வுக்காக அவரது உடல் சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Doctor Lakshmi Narasimhan

இதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக லட்சுமி நரசிம்மனின் உடல், சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'ஓ மை கடவுளே' படத்தில் கடவுளான விஜய் சேதுபதி

Intro:சேலம் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவராக இருந்து வந்த டாக்டர்
டாக்டர் லட்சுமி நரசிம்மன் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார் .Body:

அவர் அண்மைக் காலமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

மருத்துவர்களுக்கு எதிராக அரசு கொண்டு வந்த கொள்கைகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்தியவர் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த மருத்துவர்களையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கி தமிழக அரசுக்கு எதிராக போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை சேலம் மணிப்பால் மருத்துவமனையில் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்ட லட்சுமி நரசிம்மன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.Conclusion:இதனையடுத்து சேலம் அரசு தலைமை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கூடத்தில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உடற்கூறாய்வு முடிந்த பிறகு மருத்துவர் லட்சுமி நரசிம்மன் என்று மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊருக்கு அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்படும் என்று தெரிகிறது.

மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் மனைவி மின்வாரிய துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.