சேலம்: எடப்பாடி நகராட்சியை 50 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியுள்ளது. இதனால் எடப்பாடி நகரம் முழுவதும் திமுகவினர் உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிவருகின்றனர்.
எடப்பாடி நகர அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக அதிக நகர மன்ற திமுக உறுப்பினர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
இது குறித்து திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி கூறுகையில், "வாக்காளர்கள் அதிமுகவைப் படுதோல்வி அடையச் செய்து, முதலமைச்சர் ஸ்டாலினின் சாதனைகளைப் பெருமைப்படுத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் ஐபிஎஸ் சிவகாமியை 4000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற பரிதி இளம் சுருதி