சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கெம்பிளாஸ்ட் சன்மார் ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடந்த 13ஆம் தேதி நச்சு வாயு வெளியேறியது. இதையடுத்து வருவாய் துறையினர் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர். நச்சு வாயு வெளியேறியதால் மேட்டூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு வீடு திரும்பினர்.
இந்நிலையில், தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தனது தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு வாயுக்கள் மற்றும் ரசாயன கழிவுகள் காரணமாக மேட்டூர் பகுதியை சுற்றியுள்ள குஞ்சாண்டியூர், ராமன் நகர் போன்ற பகுதிகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
இது வருங்கால சந்ததியினரை அழிக்கும் செயலாகும். இத்தொழிற்சாலையில் பாதரச கழிவுகள் விஞ்ஞான முறைப்படி அல்லாமல் அபாயகரமான முறையில் திறந்தவெளி வடிகால் மூலம் அனுப்பப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது.
-
Met Ministers Thiru Sadhanand., for Chemicsls and Thiru Prakash for Environment and requested the closures of M/S Chemplast Sanmar Ltd., at Nangavalli,Mettur,as the company has repeatedly involved in release of toxic gases., dumping of wastage and contamination of ground water. pic.twitter.com/0IZRIi1hE0
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Met Ministers Thiru Sadhanand., for Chemicsls and Thiru Prakash for Environment and requested the closures of M/S Chemplast Sanmar Ltd., at Nangavalli,Mettur,as the company has repeatedly involved in release of toxic gases., dumping of wastage and contamination of ground water. pic.twitter.com/0IZRIi1hE0
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) October 23, 2019Met Ministers Thiru Sadhanand., for Chemicsls and Thiru Prakash for Environment and requested the closures of M/S Chemplast Sanmar Ltd., at Nangavalli,Mettur,as the company has repeatedly involved in release of toxic gases., dumping of wastage and contamination of ground water. pic.twitter.com/0IZRIi1hE0
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) October 23, 2019
இதுபோன்ற அபாயகரமான கழிவுகளால் நிலத்தடி நீர், காற்று மாசு ஆகியவை ஏற்படுவதோடு விளைநிலங்களையும் பாதிக்கிறது. எனவே மேட்டூரில் செயல்பட்டு வரும் கெம்பிளாஸ்ட் சன்மார் ரசாயன ஆலையை மூட வலியுறுத்தி தருமபுரி மாவட்ட திமுக எம்.பி. செந்தில்குமார். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
இதையும் படிக்கலாமே: நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து - எல் அண்ட் டி ஊழியர்களுடன் திமுக எம்.பி. ஆய்வு!