சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டிற்கு மும்மொழித் திட்டம் என்பது தேவையில்லை. மத்திய அரசு இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தினால் நாங்கள் அதை எதிர்ப்போம். தொடர்ந்து பாரத பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைப்போம். இந்தி மொழியை வைத்து திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், தமிழக மக்கள் அதை நம்பமாட்டார்கள். திமுகவின் முன்னணி நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை முதல் மொழியாக வைத்துள்ளனர். திமுக முக்கிய புள்ளிகள் தங்களின் குழந்தைகளை இந்தி படிக்க வைத்து பலவிதமான பன்னாட்டு தொழிலில் ஈடுபட வைக்கிறார்கள். இப்படி இந்தி மொழியை வைத்து திமுக இரட்டை வேடம் போடுகிறது.
‘இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்’ - தமாகா யுவராஜ்! நீட் தேர்வு பொறுத்தவரை நாங்கள் பாஜகவிடம் கூட்டணி வைத்தாலும் அதை தமிழகத்தில் தேவையில்லை என்று வலியுறுத்தி வருகிறோம், தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யும்படி வலியுறுத்துவோம். மக்களவையில் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ள திமுக நீட் தேர்வுக்கு எதிராக குரல்கொடுத்து அதை ரத்து செய்ய முயற்சி எடுக்கவேண்டும். பொய்யான வாக்குறுதிகளைக் கூறி திமுக மக்களவையில் வெற்றிபெற்றது. ஆனால் இடைதேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற முடியவில்லை என்றார்.
சேலம் - தேவராஜன்
இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது:தமாக யுவராஜ் குற்றச்சாட்டு!
சேலம்:(09-06-2019): இந்தி மொழி எதிர்ப்பு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம்,ஓமலூரில் தமாகா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்திற்கு மும்மொழி திட்டம் என்பது தேவையில்லை,மத்திய அரசு இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால் நாங்கள் அதை எதிர்ப்போம்,தொடர்ந்து பாரத பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைப்போம்,தற்பொழுது திமுக விஷ பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார்களோ அதேபோல் ஹிந்தி மொழியை வைத்தும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அரசியல் செய்து வருகின்றனர்.
ஆனால் தமிழக மக்கள் அதை நம்பமாட்டார்கள்,திமுகவின் முன்னணி நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை முதல் மொழியாக வைத்து மாணவர்களுக்கு புகட்டிவருகின்றனர்.
மேலும் திமுகவின் முக்கிய புள்ளிகளின் குழந்தைகள் மற்றும் உறவினர்களின் பிள்ளைகள் ஹிந்தி மொழியில் படிக்க வைத்து பலவிதமான பன்னாட்டு தொழில் ஈடுபட வைக்கிறார்கள்.
நீட் தேர்வு பொறுத்தவரை நாங்கள் பாஜக வினரிடம் கூட்டணி வைத்தாலும் அதை தமிழகத்தில் தேவையில்லை என்று வலியுறுத்தி வருகிறோம்,தொடர்ந்து நீட் தேர்வு ரத்து செய்யும்படி வலியுறுத்தி வருவோம்,குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கே சாதகமாக உள்ளது,தமிழகத்தின் தற்பொழுது உள்ள எதிர்க்கட்சியாக உள்ள திமுக அதிகளவு மக்களவை உறுபினர்களை பெற்றுள்ளனர் ஆகையால் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி எடுக்கவேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
காமராஜரின் சொத்தான சத்தியமூர்த்தி பவனில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உருவ படத்தை வைத்து பிறந்தநாள் விழா கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சி அலுவலகமானது சிதம்பரதிற்கோ அல்லது காங்கிரசுக்கோ சொந்தமில்லை,மேலும் காமராஜர், ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி உள்ளிட்ட தலைவர்களின் படங்களை வைத்து திமுக அலுவலகத்தில் வைத்து அஞ்சலி செலுத்துவார்களா என கேள்வி எழுப்பினார்,இந்த செயலை எந்த காங்கிரஸ் காங்கிரஸ்காரர்களும் ஏற்றுகொள்ள மாட்டார்கள்,
எங்களுடை கூட்டணி வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு மாபெரும் வெற்றி பெறுவோம் எனவும் பேசினார்.
பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக மக்களவையில் வெற்றி பெற்றது ஆனால் இடைதேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெறமுடியவில்லை.
வெளிமாநிலங்களை சேர்ந்தோரை மத்திய,மாநில பொது நிறுவனங்களில் பணியமர்த்தினால் பல்வேறு பிரச்சினைகள் எழுகிறது ஆகையால் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
பச்சிளம் குழந்தைகளை கடத்தும் நபர்களின் மீது குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யவேண்டும்,
மோடி அவர்களின் அரசு தற்பொழுது காவிரி,கோதாவரி மற்றும் பெண்ணாறு ஆறுகளை இணைக்கும் நடவடிக்கை பெருமை படக்கூடிய விசயம்,அந்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இறுதியாக குடிநீர் தட்டுபாட்டை தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நிவர்த்தி செய்து வருகின்றனர்.
ஆனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவிவருகிறது அதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்,மேலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும் " என தெரிவித்துள்ளார்.