ETV Bharat / state

'வீரபாண்டி'யில் திமுகவின் 'சேலத்து சிங்கம்' கர்ஜித்த அந்தச் சத்தம் கேட்குமா? தீவிர வாக்குச் சேகரிப்பில் தருண்! - DMK leader M.K. Stalin

சேலம்: வீரபாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் தருண் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

DMK candidate campaigning in Veerapandi Assembly constituency

author img

By

Published : Apr 3, 2021, 1:04 PM IST

Updated : Apr 3, 2021, 2:50 PM IST

திராவிட முன்னேற்றக் கழகம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் சேலம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தருண் நெய்க்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்கும்படி எடுத்துக் கூறி வாக்குச் சேகரித்தார் .

'வீரபாண்டி'யில் திமுகவின் 'சேலத்து சிங்கம்' கர்ஜித்த அந்தச் சத்தம் கேட்குமா? தீவிர வாக்குச் சேகரிப்பில் தருண்!

இந்த நிகழ்ச்சியில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திமுக வேட்பாளர் தருண் அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், தொண்டர்களால் 'சேலத்து சிங்கம்' என அழைக்கப்படுபவருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகனுடைய மருமகன் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இதையும் படிங்க: தகர்க்க முடியாத வீரபாண்டி ஆறுமுகம் கோட்டை; வெற்றி யார் பக்கம்?

Last Updated : Apr 3, 2021, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.