ETV Bharat / state

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறவினர் வீட்டில் கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள் - Salam Latest Crime News

சேலம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உறவினர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பூட்டை உடைத்து கைவரிசையைக் காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை நடந்த வீடு
author img

By

Published : Nov 3, 2019, 6:44 PM IST

சேலம் மாவட்டம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. பைனான்சியரான இவர் கடந்த 1ஆம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை, ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர் இன்று காலை கோவையில் இருந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டிலுள்ள கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை, ரூ.1.68 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொள்ளை நடந்த வீடு

உடனே இதுகுறித்து சூரமங்கலம் காவல்துறையினருக்கு சின்னசாமி தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் வீட்டை சோதனை செய்தனர். பின்பு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

கொள்ளையர்கள் தங்க நகை மற்றும் பணத்தோடு சேர்த்து எல்சிடி டிவியையும் கொள்ளையடித்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சின்னசாமி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருணின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருச்சி பெல் நிறுவன வளாகத்தில் இயங்கும் வங்கியில் 1.47 கோடி ரூபாய் கொள்ளை!

Intro:சேலத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்ற வந்த பைனான்சியர் வீட்டில் 8 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரொக்க பணத்தினை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Body:சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள ராஜலட்சுமி நகரில் குடும்பத்துடன் பைனான்சியர் சின்னசாமி என்பவர் வசித்துவருகிறார். கடந்த ஒன்றாம் தேதி அன்று உறவினரின் திருமணத்திற்காக கோவை சென்று இன்று அதிகாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னசாமி குடும்பத்தினர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்து 8 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சின்னசாமி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தங்க நகை மற்றும் பணத்தை மட்டும் திருடாமல் மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த எல்சி டி டிவியையும் திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருட்டுச் சம்பவம் நடைபெற்ற சின்னசாமி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருணின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.