சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தனியார் ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள், ஆக்சிஜன் விநியோகஸ்தர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன் பேசுகையில், "சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் பயன்பாட்டிற்குத் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பில் உள்ளது.
கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் போதியளவில் இருப்பில் உள்ளன.
கடந்த 27ஆம் தேதிவரை கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணையாக இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 459 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 64 ஆயிரத்து 215 நபர்களுக்கும் என மொத்தம் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்து 674 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணையாக 36 ஆயிரத்துு 290 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக நான்காயிரத்து 195 நபர்களுக்கும் என மொத்தம் 40 ஆயிரத்து 485 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கோவிட் தொற்றிலிருந்து 99.99 விழுக்காடு பாதுகாப்பை வழங்கும் ஷீல்டு 30