சேலம் மாவட்டம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (33). இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை செல்வத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சிறையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதைக் கண்ட சக சிறைவாசிகள், உடனடியாக சிறை காலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின் மருத்துவர்களுடன், சம்பவ இடத்திற்கு மருத்துவர்களுடன் சென்ற சிறைக் காவலர்கள், செல்வத்தை பரிசோதித்துள்ளனர். அதில் செல்வம் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து செல்வத்தின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்திய சிறைச்சாலை கைதி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் மற்ற கைதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உறவினர்களுக்கு இடையே தகராறு: குழந்தைகளுக்கு அரிவாள் வெட்டு