ETV Bharat / state

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றெடுத்த சிறுமி.. சேலம் போலீசார் விசாரணை!

சேலத்தில், திருமணம் ஆகாமல் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி பிரசவத்திற்குப் பின் இறந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Apr 8, 2023, 2:01 PM IST

சேலம்: தந்தையை இழந்த சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு மேற்படிப்புக்கு வசதி இல்லாததால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு அவரது உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமானார். 8 மாத கர்ப்பமாக இருந்த சிறுமுக்கு திடீரென நேற்று மாலை வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுமியை அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு இரவு 7.30 மணியளவில் பெண் குழந்தையை பெற்றெடுத்த சிறுமிக்கு சிறிது நேரத்தில் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

பின்னர் அந்த சிறுமி ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இரவு 11 மணி அளவில் சிறுமியை பரிசோதித்த சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: மது போதையில் எமர்ஜென்சி எக்சிட்டை திறக்க முயற்சி - நடுவானில் பயணியால் களேபரம்!

அதோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கு சிறுமி இறந்தது குறித்த தகவலைத் தெரிவித்தனர். இதன் பேரில் வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உமா சங்கர், தனலட்சுமி மற்றும் போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர்.

பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றில் பெண் குழந்தை ஒன்று இருந்தததைக் கண்டுபிடித்தனர். பக்கெட்டிலிருந்து குழந்தையை எடுத்த போலீசார், சிசு மூச்சுத் திணறிய படி உயிருடன் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே அந்த பெண் சிசுவை ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான நபர் யார்? என சிறுமியின் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருமணமாகாத சிறுமி கர்ப்பமானதோடு பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் மற்றும் தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் பக்கெட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கேரள ரயில் தீ வைப்பு வழக்கு - டெல்லி இளைஞருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.