ETV Bharat / state

பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை அம்மி கல்லால் கொன்ற மகள்! - சேலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கொன்ற மகள்

சேலம்: ஜலகண்டபுரம் அருகே மது போதையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை, மகளும் அவரது மனைவியும் சேர்ந்து தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்துள்ளதுள்ளனர்.

தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகள்

author img

By

Published : Feb 27, 2020, 9:26 PM IST

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே உள்ள ராஜா கோவில் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் கூலி தொழிலாளி படவெட்டி. இவருக்கு தனா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். படவெட்டி கடந்த சில ஆண்டுகளாக சரியாக வேளைக்குச் செல்லாமல் மது குடித்துவிட்டு, ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனால், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் கடந்த நான்கு ஆண்டுகளாக அவரது மனைவி தனது மகள்களுடன் அருகிலுள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அடிக்கடி படவெட்டி, தனது மனைவியைக் காண அவரது வீட்டிற்குச் செல்லும்போது அங்கிருந்த அவரது மகளிடம் தவறாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட தனா பல முறை கண்டித்ததாகவும் ஆனால், அவர் தொடர்ந்து மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று (பிப்ரவரி 27ஆம் தேதி) அவரது மனைவி வீட்டிற்குச் சென்ற படவெட்டி, மீண்டும் அவரது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார், அதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தனா, மகள் ஆகியோர் அவரை சரமாரியாக தாக்கி, அருகிலிருந்த அம்மி கல்லை தலையில் போட்டுள்ளனர். இதனால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து ஜலகண்டபுரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த ஓமலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர்,

தந்தை தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகள்

உயிரிழந்தவரின் உடலை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், கைது செய்யப்பட்ட மனைவி தனா, அவரது மகள் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏன் முறைத்தாய் என கேட்ட டீ மாஸ்டருக்கு கத்திகுத்து-இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.