ETV Bharat / state

Love Issue: சாதி மறுப்புத் திருமணம்; பட்டியலின இளைஞர் தற்கொலை - சேலம் பட்டியலின இளைஞர் தற்கொலை

சேலம் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பட்டியலின இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலின இளைஞர் தற்கொலை
பட்டியலின இளைஞர் தற்கொலை
author img

By

Published : Nov 17, 2021, 7:20 PM IST

சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த தட்டாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மோகன்ராஜ் (29).

இவரும் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சித்ரா (19) என்பவரும் ஈரோடு மாவட்டம், வெப்படையில் உள்ள தனியார் ஆலையில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.

மோகன்ராஜ், சித்ராவின் காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. மோகன்ராஜ் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் சித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, 12ஆம் தேதி மதுரையில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

சாதி மறுப்புத் திருமணம்

இந்த நிலையில், பெண்ணைக் காணவில்லை என சித்ராவின் உறவினர்கள் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை அறிந்த, காதல் இணையர் தங்களது உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்புக் கேட்டு, சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்த இருவரையும் தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர், மோகன்ராஜை மிரட்டி தாக்கியதாகவும்; சித்ராவை சேலம் அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பியதாகவும் தெரிகிறது.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

பட்டியலின இளைஞர் தற்கொலை

இந்நிலையில் மோகன்ராஜின் சடலம் நேற்று (நவ.16) அதிகாலை சங்ககிரி மாவேலிபாளையம் ரயில்வே இருப்புப் பாதையில் கிடந்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோகன்ராஜ் தற்கொலை செய்து கொள்வதாக எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். அதில் தனது உயிரிழப்பிற்கு சித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

ஆதித் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த ஆதித் தமிழர் கட்சியினர், சித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும்; இறப்புக்கு நீதிகேட்டும் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில், "இறந்த மோகன்ராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி உள்ளது. அவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் 6 வயது பெண்குழந்தையும் உள்ளனர்.

அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துள்ளனர். அதுதொடர்பான விவாகரத்து வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் - குற்றவாளிகளுக்கு வலைவீசும் சிபிஐ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.