சேலம்: நெத்திமேடு பகுதியில் வரதராஜ், கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுதாகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உறவினர்களை அழைத்து வீட்டில் கறிவிருந்திற்காக உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ பற்றியது.
இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிலிருந்த சுதாகர் அவரது உறவினர்கள் ராணி, காவியா, மற்றும் குழந்தைகள் வருஷாஸ்ரீ, துவாரகன், பிரவீன் ஆகிய ஆறு பேருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ஆறு பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீவிபத்தில் வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஆறு பேரையும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், முழுகவனம் செலுத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹோமியோபதி மருத்துவரை கடத்திய இருவர் கைது - தூண்டிவிட்ட பெண்ணிடம் விசாரணை