ETV Bharat / state

"டெல்லியில் இருந்தே வந்தாலும்.. 2026 திமுகவுக்கே" - உதயநிதி ஸ்டாலின் உறுதி! - UDHAYANIDHI STALIN

டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி, 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியே என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் (Credits - Udhayanidhi Stalin 'x' Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 9:47 AM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திருவுருவச் சிலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை (நவ.6) திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், "இன்றிலிருந்து நாம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவோம். நம் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளி இருப்பர். அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு கொண்டு நம் பிரச்சாரத்தை தொடங்குவோம்.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் யாராக இருந்தாலும், எதிர்த்து யார் வந்தாலும், எப்பேர்ப்பட்ட கூட்டணி அமைத்தாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. லோக்கலில் இருந்து வந்தாலும் சரி.. அவர்களுக்கு திமுக வெற்றியை மட்டுமே கொடுக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "2026ல் திமுக ஆட்சி என்பதை உறுதிப்படுத்திய கோவை மக்கள்" - மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

அதனைத் தொடர்ந்து விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளுக்கு, 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 825 தொகுப்புகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் 295 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.34.34 கோடி மதிப்பில் வங்கிக் கடன் இணைப்புகளையும் வழங்கி உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "திராவிட மாடல் அரசு விளையாட்டுதுறைக்கு தருகின்ற முக்கியத்துவத்தின் காரணத்தால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் விளையாட்டு துறையை நோக்கி வருகிறார்கள்.

நம் அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் வார்த்தைகளால் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.