மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட அலுவலகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை திறக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் , விமானம் மூலம் சேலம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது இந்திய நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் தவறான நடைமுறைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து பெரும் அளவில் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. தொழிலாளர்கள், விவசாயிகள் என பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் .
குறிப்பாக வேலையின்மை அதிகளவில் உள்ளது. இதனைக் களைய சிபிஎம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது . பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார பின்னடைவை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:
டெங்கு நோய்த்தடுப்பு பணியில் நூறுநாள் திட்ட பணியாளர்கள் - மாவட்ட ஆட்சியர்