சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் மாநகர பகுதியில் 40 பேர், மகுடஞ்சாவடியில் 9, எடப்பாடியில் 6, கொளத்தூர் பகுதியில் 5, நங்கவள்ளியில் 3, தாரமங்கலத்தில் இருவர், ஓமலூரில் 72 பேருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், ராமநாதபுரத்திலிருந்து வந்த இருவர், திருநெல்வேலி மற்றும் மதுரையிலிருந்து வந்த தலா ஒருவர் என வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதில், கர்நாடகம், மேற்கு வங்கத்திலிருந்து வந்த தலா 4 பேர், கேரளம் இருவர், ஜார்கண்ட் ஒருவர் என வெளிமாநிலங்களைச் சேர்ந்த 11 பேருக்கும் ஒரே நாளில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து தற்போது ஆயிரத்து 34 பேர் என உயர்ந்துள்ளது. இதில் 288 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுமார் 743 பேர் , கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை, மதுரை, ராமநாதபுரம் நகரங்களைத் தொடர்ந்து தற்போது சேலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இதையும் படிங்க: அனுமதியை மீறி செயல்படும் மதுபான கூடங்களால் கரோனா பரவும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்!