ETV Bharat / state

கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளை காவு வாங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்! - Corporate company that buys broilers

சேலம்: கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கறிக்கோழிகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

farmers
farmers
author img

By

Published : Nov 16, 2020, 4:12 PM IST

சேலம் மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளை அமைத்து அவற்றில் கறிக்கோழிகளை வளர்த்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த கறிக்கோழிப்பண்ணைகளில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே, பண்ணைகளிலிருந்து கறிக்கோழிகளை வாங்கும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கோழிக்குஞ்சு மற்றும் தீவனம் ஆகியவற்றை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் மிகக்குறைந்த விலைக்கு கறிக் கோழிகளை, தனியார் நிறுவனங்கள் வாங்குவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (நவ. 16) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த கறிக்கோழி வளர்ப்புப்பண்ணை விவசாயிகள, கறிக்கோழிகளுடன் வந்து மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க செயலாளர் ஜெயக்குமார்,

"துணை முதலமைச்சர் மற்றும் கால்நடை துறை அமைச்சருக்கு சொந்தமான கறிக்கோழி விற்பனை கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களிடம் மிகக் குறைந்த விலைக்கு கறிக் கோழிகளை கொள்முதல் செய்கின்றன.

சேலம் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்
சேலம் ஆட்சியர் அலுவலகம் வந்த விவசாயிகள்

இதனால், பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறோம். எங்களிடமிருந்து கறிக்கோழிகளை கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்கள் ஒரு கிலோ கறிக்கோழிக்கு, வழங்கப்படும் விலையைவிட 12 ரூபாய் உயர்த்தி வழங்கிட வேண்டும். தற்போது வழங்கப்படும் மூன்று ரூபாய் விலை உயர்வு எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூடுதல் விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் மீதான வரி ஏய்ப்பு வழக்கு: வருமான வரித்துறைக்கு நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.