சேலம் மாவட்டத்தில் கரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 138 மையங்கள் அமைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி போடும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடைசியாகக் கடந்த மூன்றாம் தேதி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று (ஜூலை 9) வரை தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் தினந்தோறும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வத்துடன் வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று (ஜூலை 8) சென்னையிலிருந்து, சேலத்திற்கு 7400 தடுப்பூசிகள் வந்த நிலையில், இன்று (ஜூலை 9) ஒரு மையத்தில்கூட தடுப்பூசி செலுத்தப்படாதது அப்பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி கையிருப்பில் இல்லை - சென்னையில் முகாம்கள் ரத்து!