கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. கரோனா நோய்த் தொற்றை முழுவதுமாக ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் ஓய்வில்லாமல் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருள்களை அரசு, தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள புலிக்குத்தி தெருவில் கடந்த 60 நாள்களாக ஓய்வின்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஶ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாகத்தினர், அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.
![corona awareness Corona Relief To Cleanliness Workers In Salem Cleanliness Workers Corona Relief To Cleanliness Workers புலிக் குத்தித் தெரு தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா நிவாரணம் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7329690_slm1.jpg)
இந்நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்கள் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைபிடித்து, நீண்ட வரிசையில் நின்று நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றனர்.
இதில், ஶ்ரீராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாகிகள் சுப்பிரமணியம், கணபதி செட்டியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தி, நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:துப்புரவுப் பணியாளர்கள் இனி 'தூய்மைப் பணியாளர்கள்' - தமிழ்நாடு அரசு ஆணை!