சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனடிப்படையில் இன்று (ஆக.6) சேலம் மாநகர் 107, கொங்கணாபுரம் 3, ஓமலூர் 2, நங்கவள்ளி 1, வீரபாண்டி 2, சேலம் 2, தாரமங்கலம் 1, சங்ககிரி 1, மகுடஞ்சாவடி 1, கொளத்தூர் 1, எடப்பாடி 1, எடப்பாடி நகராட்சி 1, ஆத்தூர் 10, தலைவாசல் 7, பனமரத்துப்பட்டி 6, கெங்கவல்லி 5, நரசிங்கபுரம் 2, ஏற்காடு 1 என மாவட்டத்தில் 154 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களான கடலூரிலிருந்தவர்கள் 2 பேருக்கும், சென்னையிலிருந்து வந்தவர்கள் 3 பேருக்கும் என கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 36 வயது நபரும், 58 வயதான ஒருவரும் உயிரிழந்தனர்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு 4,088 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,881 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,166 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 26 ஆயிரத்து 833 பேர் மருத்துவ முகாம் மூலம் பரிசோதனை - சென்னை மாநகராட்சி