ETV Bharat / state

வணிக நிறுவன பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

author img

By

Published : Sep 10, 2020, 8:18 PM IST

சேலம்: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் 3,328 பணியாளர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என சேலம் மாநகர ஆணையாளர் சதீஷ்  தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

இதுகுறித்து சேலம் மாநகர ஆணையாளர் சதீஷ் கூறியுள்ளதாவது, 'சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று நோய்ப் பரவுவதை முற்றிலுமாகத் தடுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலும் 56 மருத்துவக்குழுக்கள் மூலம் தினந்தோறும் 10 இடங்களில் நிலையாகவும்; 126 இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் என மொத்தம் 136 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 24 வரை, 976 சிறப்பு மருத்துவ முகாம்களும்; ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 9 வரை தினந்தோறும் 136 முகாம்கள் என 2,176 சிறப்பு மருத்துவ முகாம்களும் என மொத்தம் 3,152 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 640 நபர்களுக்கு மருத்துவக் குழுவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருத்துவ
சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று பரிசோதனையின் முடிவில் 393 நபர்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் அரசு பொது மருத்துவமனை/கோவிட் கேர் சென்டர்களில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு தற்போது பல்வேறு தளர்வுகளுடன் அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் செயல்பட அனுமதித்துள்ளது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் எவரேனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பின் கடைகள்/ வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று எளிதில் பரவ வாய்ப்பாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள்/பணியாளர்களின் நலன் கருதி மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும், அரசு/ தனியார் வங்கிகள், காவல் நிலையங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், செல்போன் கடைகள், துணிக் கடைகள், நகைக் கடைகள், எலக்ட்ரிக் மற்றும் எலக்ரானிக் ஷோரூம்கள், 2 மற்றும் 4 சக்கர வாகன ஷோரூம்கள், பணிமனைகள், சர்வீஸ் சென்டர்கள், முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள்,பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகள்/வணிக நிறுவனங்களிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கரோனா தொற்று நோய் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 10) சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.3ல் ரெட்டியூர் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் செயல்பட்டு வரும் 35-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 320-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கரோனா தொற்று நோய் பரிசோதனை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 3 நாட்களில் மாநகரப்பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள் / வணிக நிறுவனங்களில் பணிபுரியும் 3,328 பணியாளர்களுக்கு கரோனா தொற்று நோய் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.15ல் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் (சேலம் கோட்டம்) பணிபுரியும் பணியாளர்கள், ஓட்டுநர்கள்/ நடத்துனர்களுக்கு கரோனா தொற்று நோய் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார். மாநகரப்பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்துக் கடைகள்/ வணிக நிறுவனங்களும் கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான இயக்க நடைமுறைகளை கட்டாயம் கடைபிடித்து மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்’ என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.