தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றின் தாக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று (ஜூன் 22) 6,895 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சேலம் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 22) 485 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,4826 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகையில், "சேலம் மாநகராட்சியில் 91 பேர்
எடப்பாடி - 9 பேர்
காடையாம்பட்டி - 2 பேர்
கொளத்தூர் - 10 பேர்
கொங்கணாபுரம் - 6 பேர்
மகுடஞ்சாவடி - 8 பேர்
மேச்சேரி - 11 பேர்
நங்கவள்ளி - 20 பேர்
ஓமலூர் - 17 பேர்
சேலம் வட்டம் - 14 பேர்
சங்ககிரி - 12 பேர்
தாரமங்கலம் - 25 பேர்
வீரபாண்டி - 26 பேர்
ஆத்தூர் - 7 பேர்
அயோத்தியாப்பட்டணம் - 12 பேர்
கெங்கவல்லி - 6 பேர்
பனமரத்துப்பட்டி - 5 பேர்
தலைவாசல் - 3 பேர்
வாழப்பாடி - 4 பேர்
ஆத்தூர் நகராட்சி - ஒருவர்
மேட்டூர் நகராட்சி - 12 பேர்
நரசிங்கபுரம் நகராட்சி - 4 பேர்
என மாவட்டத்தைச் சேர்ந்த 305 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 817 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று (ஜூன் 22) மட்டும் 23 பேர் உயிரிழந்தனர். 79 ஆயிரத்து 722 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், 3696 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 1408 பேர் உயிரிழந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேலம் வழியாக ஹதியா-எர்ணாகுளம் செல்லும் சிறப்பு ரயில்கள் பற்றிய அறிவிப்பு