சேலம் மாவட்டம் குகைப் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதிதாக அடுக்குமாடி கட்டிவருகிறார். அதன்படி, நேற்று (மார்ச் 18) கார் நிறுத்துமிடம் கட்டும் பணியில் நான்கு கட்டடத் தொழிளாலர்கள் ஈடுபட்டுவந்தனர். அவர்களில், புதுரோட்டைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் இடிக்கப்பட்ட கட்டடத்தின் வழியே கட்டுமானப் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது இடிப்பதற்காக மிச்சம் வைக்கப்பட்ட தடுப்புச்சுவர் திடீரென அவர் மீது சரிந்து விழுந்தது. அதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சடலமாக மீட்பு!