ETV Bharat / state

சேலத்தில் அஞ்சல் வாக்குப் பெறுவதற்கான பணி தொடக்கம்

author img

By

Published : Apr 1, 2021, 6:57 AM IST

வாக்காளர்களிடம் அஞ்சல் வாக்குப் பெறுவதற்கான பணி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

வாக்காளர்களிடம் தபால் வாக்கு பெறுவதற்கான பணி தொடக்கம்

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள சௌடேஸ்வரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் சிறப்பு மையத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல் துறை அலுவலர்கள், பணியாளர்கள் அஞ்சல் வாக்குச் செலுத்திவருவதை சேலம் மாவட்டத் தேர்தல் அலுவலர் ராமன் நேற்று நேரில் ஆய்வுசெய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ’’சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை நடைபெறவுள்ளது.

இங்கு மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் நேரில் வாக்களிக்க இயலாத வாக்காளர்கள் தங்களின் விருப்பத்தின்பேரில் அஞ்சல் வாக்கு மூலம் தங்களது வாக்கைச் செலுத்த விருப்பம் தெரிவித்து சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக படிவம் 12 டி பெற்று பூர்த்திசெய்து மார்ச் 16ஆம் தேதிக்குள் வழங்கினால் அவர்களுக்கு அஞ்சல் வாக்குச் செலுத்தும் வசதி ஏற்படுத்தித் தரப்படும்.

இது குறித்து, விவரங்கள் அந்தந்தச் சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் மூலமாக அனைத்து வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டு எந்தெந்தத் நாள்களில் இவ்வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது என்ற விவரங்களும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் அஞ்சல் வாக்குச் செலுத்தும் பணி இன்றுமுதல் வரும் இரு நாள்களுக்கு நடைபெறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிராக 'ஒன்றிணைவோம் வா' - எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.