தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27, 30 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தல் பணியில் சேலம் மாவட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு வருகின்ற 15.12.2019 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறகிறது. இதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராமன் முன்னிலையில் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
இது குறித்து ஆட்சியர் ராமன் கூறும்போது, "சேலம் மாவட்டத்தில் இத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு தேர்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்கவுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு அறிவிப்பு ஆணைகள் அச்சிடப்பட்டு மாவட்ட அளவிலான அந்தந்த துறை தலைமை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படவிருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைப்பெற 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை