சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ரோகிணி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு வாகனமானது சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி பரப்புரை மேற்கொள்ள உள்ளது. இந்நிகழ்ச்சியில் சேலம் தெற்கு சட்டமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சதீஷ் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.