ETV Bharat / state

அரவக்குறிச்சியில் இன்று முதல்வர் பரப்புரை - நாளை முதல்வர் பரப்புரை

சேலம்: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

அரவக்குறிச்சியில் நாளை முதல்வர் பரப்புரை
author img

By

Published : May 5, 2019, 2:40 AM IST

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டபேரவைத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதில், அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலத்திற்கு இன்று காலை வருகிறார். சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்று உணவை முடித்துவிட்டு, பகல் 2 மணிக்கு மேல் கார் மூலம் அரவக்குறிச்சியில் பரப்புரையில் தொடங்க உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையம், நெடுஞ்சாலை நகர் பகுதியில் காவல்துறையினரால் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நாளை சேலம்  வருகை 

சேலம்(04.05.2019):  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  நாளை (ஞாயிறு ) காலை சேலம் வருகிறார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை வருகிறார்.

சேலம் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு செல்கிறார்.

இதைத்தொடர்ந்து மதிய உணவை முடித்துவிட்டு பகல் 2 மணிக்கு மேல் கார் மூலம் அரவக்குறிச்சி செல்கிறார். அங்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையம், நெடுஞ்சாலை நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.