ETV Bharat / state

முதலமைச்சர் குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

சேலம்: ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

author img

By

Published : Nov 17, 2019, 9:15 PM IST

salem collector

சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் கு.சித்ரா கலந்துகொண்டார்.

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்போம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆட்சியர் சி.அ.ராமன் பேசுகையில், "முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்ப்பு கூட்டம் ஆகஸ்ட்19ஆம் தேதி எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்டபட்ட நங்கவள்ளியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 56 ஆயிரத்து 267 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 26 ஆயிரம் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களுக்கு தீர்வுகாண சிறப்பான திட்டமாக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் அமைந்துள்ளது. விடுப்பட்ட மனுக்கள் மீண்டும் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறைகளின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழங்குடியினருக்கு வழங்கப்படும் சாதி சான்றுகள் குறித்த மனுக்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு தற்பொழுது சாதிசான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக மகளிர் திட்டம், மாவட்ட தொழில்மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் முறையான தொழில்பயிற்சிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொழில் முனைவோர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்காட்டில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் தரமான ஆங்கில வழிக் கல்வியை அங்கேயே தங்கி பயிலும் வண்ணம் ஏகலைவா உண்டு, உறைவிட பள்ளி விரைவில் அமையப்பெறவுள்ளது. இதன் மூலம் உயர் தரத்திலான ஆங்கில வழிக் கல்வியை மாணவ, மாணவிகள் பெறுவார்கள்.

முதலமைச்சர் குறை தீர்ப்பு திட்த்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், மொத்தம் 192 பயனாளிகளுக்கு 19.2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

Intro:
சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரின்
சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன்
தலைமையில் நடைபெற்றது.Body:
         சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கான முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன், தலைமையிலும், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் த கு.சித்ரா அவர்கள் முன்னிலையிலும் இன்று நடைபெற்றது.

இந்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் இராமன் பேசுகையில்,"

         மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 19.08.2019 அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, நங்கவள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் கடந்த 09.11.2019 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
         மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டு பெறப்பட்ட 56,267 மனுக்களில் 26,000 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்ற மனுக்கள் தகுதி இல்லாத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதுபோல அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பெறப்பட்ட மனுக்களில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் மாதாந்திர உதவித்தொகை கேட்டு வரப்பெற்ற பல்வேறு மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் தகுதி உடையதாக இல்லாமல் இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆய்வு செய்தார்கள்.
         அதன் அடிப்படை காரணம் ரூ.50,000/- சொத்து மதிப்பிற்கு மேல் இருந்தால் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தகுதி இல்லாத பயனாளியாக எண்ணப்படுகிறது. இந்த சொத்து மதிப்பு காரணத்தால் தகுதியுடைய பயனாளிக்கு ஓய்வூதியம் கிடைக்க தடையாக உள்ளதை ஆய்வு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாதாந்திர ஓய்வூதிய உதவித் தொகை பெற குறைந்தபட்ச சொத்து மதிப்பினை ரூ.50,000/-இல் இருந்து ரூ.1,00,000/-ஆக உயர்த்தி உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் ஆய்விற்கு எடுத்துகொள்ளப்பட்டு தகுதியுடைய நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க ஒரு சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.
         இரண்டாவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் யாரெல்லாம் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார்களோ அவர்கள் வாழக்கூடிய இடம் புறம்போக்கு நிலமாக இருந்தால் அவர்களுக்கு உடனடியாக நத்தமாக மாற்றி வீட்டுமனைப்பட்டாகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். பல்வேறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கை மனுக்களுக்கு தீர்வுகாண சிறப்பான திட்டமாக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் அமைந்துள்ளது. விடுப்பட்ட மனுக்கள் மீண்டும் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறைகளின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
         பழங்குடியினருக்கு வழங்கப்படும் சாதிசான்றுகள் குறித்த மனுக்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு தற்பொழுது சாதிசான்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இச்சாதிசான்றுகளை அனைவரும் வேலை வாய்ப்பை பெறுவது, உயர்கல்வி கற்பது போன்ற ஆக்க பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தொழில் துவங்குவதற்க ஏதுவாக மகளிர் திட்டம், மாவட்ட தொழில்மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றில் முறையான தொழில்பயிற்ச்சிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது அதனை தொழில் முனைவோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஏற்காட்டில் உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் தரமான ஆங்கில வழிக்கல்வியை அங்கேயே தங்கி பயிலும் வண்ணம் ஏகலைவா உண்டு, உறைவிட பள்ளி விரைவில் அமையப்பெறவுள்ளது. இதன் மூலம் உயர்தரத்திலான ஆங்கில வழி கல்வியை மாணவ, மாணவியர்கள் பெற இயலும்.
         முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்களை பெற்று அம்மனுக்கள் மீது தீர்வு காண மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அவ்வாறு பெறப்பட்ட மனுகளின் மீது மேற்கொண்ட நடவடிக்கைகளின் பேரில் இன்றைய தினம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 31 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 50 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகையும், 13 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், 1 பயனாளிகளுக்கு முதிர்கன்னி உதவித்தொகையும், 93 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் குடியிருப்புத்திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 இலட்சம் பெறுவதற்கான உத்தரவு ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் சூரிய சக்தி பசுமை இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூ.1.80 இலட்சம் பெறுவதற்கான உத்தரவு ஆணையினையும் என மொத்தம் 192 பயனாளிகளுக்கு ரூ.19.2 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. " என்று தெரிவித்தார்.

Conclusion:இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட வன அலுவலர் , பெரியசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.அருள்ஜோதி அரசன், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.