ETV Bharat / state

அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா : சொந்த ஊரில் கொடி ஏற்றிய முதலமைச்சர்! - ADMK Formation day

சேலம் : அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அக்கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா: சொந்த ஊரில் கொடி ஏற்றிய முதலமைச்சர்!

author img

By

Published : Oct 17, 2020, 10:35 AM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசம்மாள் கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் சேலத்தில் காலமானார் . இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனால் முதலமைச்சரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அதிமுகவில் 49ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று (அக்.17) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று காலை கொடியேற்றி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் மறைவையொட்டி தன் சொந்தக் கிராமத்தில் தங்கியுள்ளதை அடுத்து, அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் எதிரில் உள்ள திடலில் இன்று காலை கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதிமுகவின் 49ஆவது ஆண்டு விழா : சொந்த ஊரில் அதிமுக கொடி ஏற்றி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க...ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.