தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி ஆகியோர் சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
அதேபோல, ஈரோடு கிழக்குத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா, சேலம் மேற்குத் தொகுதி பாமக வேட்பாளர் இரா.அருள் ஆகியோரும் முதலமைச்சரை சந்தித்தனர்.
மேலும், சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர். அனைவரிடமும் 'வெற்றி விழாவுக்குத் தயாராக இருங்கள்; அமைதியாக வாக்கு எண்ணிக்கை வரை காத்திருப்போம்; வாக்கு எண்ணிக்கை மையங்களை 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்' என்று முதலமைச்சர் கூறியதாக தெரிகிறது.
இதனிடையே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் தேனியில் இன்று காலமானார்.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை (ஏப்.09) காலை தேனி செல்லவுள்ளார்.
இதையும் படிங்க: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்குக் கரோனா தொற்று உறுதி!