தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம், நெடுஞ்சாலை நகர் இல்லம் செல்கிறார். அங்கு அவருக்கு அதிமுக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தலைமையில் கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர், வியாழக்கிழமை காலை 9 மணி அளவில், பெரியசோரகையில் உள்ள சென்றாயன் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் அவர், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வனவாசி பாலிடெக்னிக் கல்லூரி சென்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
அதன் பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் அஸ்தம்பட்டியில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.
அதன் பிறகு அங்கிருந்து இரவு சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டிற்குத் திரும்பி இரவு தங்கும் முதலமைச்சர், வெள்ளிக்கிழமை(20.11.2020) காலை சேலத்தில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டு செல்வார் என்று அரசு துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.