சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி பிரகாஷ். இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, கடந்த 10ஆம் தேதி இளம்பிள்ளையைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் சேலம் தமிழ்ச் சங்கம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ராஜகோபாலை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ஒரு சவரன் தங்க நகையை பிரகாஷ் பறித்துச் சென்றுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் பிரகாஷைப் பிடிக்க முயன்றபோது பொது மக்களுக்கும் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜகோபால் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்டையில், காவல் துறையினர் பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதேபோல், கடந்த 2017 ஆம் ஆண்டு பள்ளபட்டி பகுதியில் பானுமதி என்பவர் வீட்டில் புகுந்து கொள்ளை அடித்துச் சென்ற வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் ரவுடி பிரகாஷ் மீது நிலுவையில் உள்ளன. ஆனால், தற்போது ஜாமினில் வெளியே இருந்த பிரகாஷ் மீண்டும் மீண்டும் திருட்டு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: