ETV Bharat / state

எதிர்க்கட்சித்தலைவரின் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - salem latest news

சேலம்: இரும்பாலை வளாகத்தில் கரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

author img

By

Published : May 20, 2021, 4:39 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.20) வருகை தந்தார்.

சென்னையிலிருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் வந்த முதலமைச்சர், சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சிறப்பு சிகிச்சை மையத்தில் செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் குழாய் இணைப்பு உள்ளிட்ட அம்சங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிகிச்சை எடுக்கும் முறை குறித்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர், இந்த சிகிச்சை மையத்திற்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

சேலம் இரும்பாலையிலிருந்து கரோனா சிகிச்சை மையத்திற்கு ஆக்ஸிஜன் வழங்கும் நடைமுறைகள் குறித்து இரும்பாலை அலுவலர்களிடம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

சிறப்பு சிகிச்சை மையத்தில் முழுமையாக நடந்து சென்று பார்வையிட்ட அவர், பொதுமக்களின் உடல் நலனை சிறப்பாக கவனித்து கரோனா தொற்றில் இருந்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மலர்விழி, சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மையத்தின் நுழைவுவாயில் பகுதியில், இரு இடங்களில் செவிலியர்களுக்கான தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மையத்தில் நுழைபவர்கள் கைகளை சுத்தமாகக் கழுவுவதற்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மையத்தின் ஒவ்வொரு படுக்கைக்கும் 3 அடி இடைவெளி விட்டு, 10 வரிசைகளில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வரிசைக்கும் இடையில் 5 அடி இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஏ,பி, சி, டி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக ஆண்,பெண் கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டில் மையத்தின் பின்புறத்தில் அவசரகால நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து படுக்கைகளுக்கும் தனித்தனியாக ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்துவதற்காக இரும்பாலை ஆக்ஸிஜன் உற்பத்தி களத்திலிருந்து சிகிச்சை மையம் வரை தனி பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது.

வெயில், மழையால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில் நுட்பத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வசதியும், அதற்கு மாற்றாக ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஒரு தொகுதிக்கு 200 படுக்கையைத் தயார் செய்ய நடவடிக்கை' அமைச்சர் சேகர் பாபு !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.