சேலம்: அம்மாபேட்டையில் உள்ள சீதா ராமசந்திரன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றுபவர் கண்ணன். சேலம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா ராஜ்மோகன் நைட்டி உடை அணிந்து கோவிலுக்கு வந்ததாகவும், கோவிலுக்குள் இது போன்று உடை அணிந்து வரக்கூடாது எனவும் முறையான உடை அணிந்து வர வேண்டும் என அர்ச்சகர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் அர்ச்சகரை தாக்க முயற்சி செய்தாக கூறப்படுகிறது. ஆகம விதிகளுக்கு முரணாக கோவிலை 12 மணி வரை திறந்திருந்ததாகவும் பெண்களிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி அர்ச்சகர் கண்ணனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டதுடன். பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி அர்ச்சகர் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் , “தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எப்போது நடைபெற்றது என்பதற்கான விவரங்கள் இல்லை, யாருக்காக இரவு 12 மணி வரை கோவிலை திறந்திருந்தேன் எனவும் கூறவில்லை என்பதால், தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு ஜூன் 1ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, கோவில் செயல் அலுவலர் மற்றும் திமுக கவுன்சிலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : பேருந்துகள் சாலையில் ஓடுவதே ஆபூர்வமாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி கிண்டல்!