ETV Bharat / state

சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மத்திய அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை! - பக்கன் சிங் செய்தி

சேலம்: அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மத்திய உருக்குத் துறை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சேலத்தில் அம்பேத்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மத்திய அமைச்சர்!

author img

By

Published : Dec 6, 2020, 11:58 AM IST

அம்பேத்கரின் 64ஆவது நினைவு நாளையொட்டி, சேலம் சுந்தர் லாட்ஜ் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, மத்திய உருக்குத் துறை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பேசிய பக்தன் சிங் குலாஸ்தே, “புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில், சேலத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்ததை வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறேன். சேலத்தில் உள்ள இரும்பாலையை தனியார்மயமாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஆனால் அது குறித்து இப்போது கருத்து கூற முடியாது. ஆனால் இரும்பாலை தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் நடக்கவிட மாட்டோம். அதனால் இரும்பாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கவலைப்பட வேண்டாம்.

சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மத்திய அமைச்சர்!

நாடு முழுவதும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும். சேலம் உருக்காலை தனியார்மயமாக்குவது தொடர்பான இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

அங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொரு தொழிலாளர்களின் நலனில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும். இதை நான் உறுதியாகச் சொல்கிறேன். தொழிலாளர்விரோத நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.