ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சேலத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு காரில் சென்றார்.
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல காரை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக நடந்து சென்ற இளைஞர் மீது கார் மோதியதில் தூக்கிவீசப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்த இளைஞரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் வெங்கடேஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் அதிமுக பிரமுகர் என்பது தெரியவந்தது.
தற்போது கார் மோதியதில் இளைஞர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: டிராக்டர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு: தலைமறைவான வாகன ஓட்டுநர் கைது!